ஆடிப்பிறப்பை ஒட்டி உற்சாகமாக நடைபெற்ற தேங்காய் சுடும் திருவிழா..!
சேலத்தில் ஆடிப்பிறப்பை ஒட்டி தேங்காய் சுடும் திருவிழா உற்சாகமாக நடைபெற்றது. திருவிழாக்களில் ஆடி மாதத்தை கோலாகலமாக தொடங்கி வைப்பதில் தேங்காய் சுடும் நிகழ்வு முக்கியமான ஒன்று.
அந்த வகையில் இந்த திருவிழா சேலத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தேங்காயில் துளையிட்டு அதில் வெல்லம், அவுல், பாசிப்பயறுப்பு உள்ளிட்ட பல பொருட்கள் நிரப்பின. பின்னர் குச்சியில் தேங்காயை சொருகி வீட்டு வாசலில் தீயிட்டு அதிலுள்ள பூரணத்தை விநாயகருக்கு படைத்து மகிழ்ந்தனர்.
வளர வளர இந்த பாரம்பரியத்தை பல குடும்பத்தினர் மறந்து போயியுள்ளனர். கொண்டலாம்பட்டி பகுதி மக்கள் தேங்காய் சுட்டு உற்சாகமாக கொண்டாடினர்.





