ஒரு குழந்தைக்கு ஆசன வாயில் துளை இல்லை..! மற்றொரு குழந்தைக்கு கழுத்து நரம்பில் கோளாறு..! வறுமையில் கண்ணீருடன் பெற்றோர்.!
வயிறு வழியாக இயற்கையை உபாதையை கழிக்கும் ஒரு குழந்தை தலையை நிமிர்த்த முடியாமல் இருக்கும் இரண்டாவது குழந்தை செய்வதறியாமல் தவிக்கும் பெற்றோரின் கண்ணீர். மதுரை கைத்தறி நகரை சேர்ந்த மணிகண்டன், பூமாதேவி தம்பதியின் காதல் திருமணம் மகிழ்ச்சி முதல் குழந்தை பிறந்த உடனேயே முடிந்துபோனது.
பிறக்கும் போது ஆசனவாயில் துளையின்றி பிறந்த அவர்களது பெண் குழந்தைக்கு தற்போது 4 வயது. செயற்கை முறையில் வயிற்றுப்பகுதியில் துளையிட்டு அதன் வழியே தான் நான்கு ஆண்டுகளாக இயற்கை உபாதைகளை சிறுநீர் கழித்து வருகிறார். அறுவை சிகிச்சையே முழுமையான தீர்வு என்ற நிலையில்
அரசு மருத்துவமனை தொடர்ந்து அலைக்கழித்து வருவதாக இந்த தம்பதி வேதனை தெரிவிக்கின்றனர்.
கழுத்து நரம்பு பாதிப்பால் ஒன்றரை வயதான நிலையிலும் இன்னும் குழந்தை தலை நிமிர்ந்து பார்க்கவில்லை என கண்ணீர் வடிக்கின்றனர் பெற்றோர். விறகு வெட்டி பிழைக்கும் மணிகண்டனுக்கு கிடைக்கும் 3 ஆயிரம் ரூபாய் கூலி உணவுக்கே போதாத நிலை அதனால் நாள்தோறும் இரு வேளை பட்டினி என்பது இவர்களது வாழ்க்கையில் விதி ஆகிப் போனதால் குழந்தைகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் தவிக்கின்றனர்.
இவர்களது குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு இருந்த போதும் இதுவரை அளிக்கப்பட்டு வருவதாகவே சொல்கின்றனர். மாவட்ட ஆட்சியர் வினய்யை தொடர்பு கொண்டு கேட்டபோது உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்.






