--- --:--:-- --

பேய் பிடித்ததாக கூறி பெற்றோரை ஏமாற்றி வந்த சிறுவன்

8

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த சிறுவன் ஒருவன் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதற்காக அவனுக்கு பேய் பிடித்ததாக பெற்றோரை ஏமாற்றி வந்துள்ளான்.சாப்பிட்டால் வாந்தி வருவதாகவும் அவன் முன்னால் நிழல் போல் உருவம் அடிக்கடி வருவதாகவும் சைக்கிளில் செல்லும் போது யாரோ காலை பிடித்து இழுப்பதாகவும் கூறி வந்துள்ளான்.

 

மிகவும் அதிர்ச்சிக்குள்ளான சிறுவனின் பெற்றோர் அவனை பல மருத்துவர்களிடம் சென்று காட்டிய போதும் எந்த பலனும் அளிக்கவில்லை.வேறு வழியின்றி சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் அருள்வாக்கு சொல்லும் திருநங்கையிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.அந்த திருநங்கை சிறுவனிடம் சிறிது நேரம் பேச்சுக் கொடுத்தபோது அவன் பொய் சொல்கிறான் என்று புரிந்து கொண்டார்.

 

அச்சூழலை சமாளிக்க சிறுவன் நாடகம் செய்துள்ளான். அதனால் சிறுவனின் பெற்றோரை வெளியே அனுப்பி வைத்து  இவ்வாறு பொய் சொல்லி ஏமாற்றினால் காளியம்மன் சும்மா விடாது என்றும் அறிவுரை வழங்கியுள்ளார்.சாப்பிட்டால்  வாந்தி வருவதாக கூறிய அந்த சிறுவனை அனைவர் முன்பும் சாப்பிட வைத்துள்ளார்.இந்த திருநங்கை அவர்கள் ஏற்கனவே காதலை மறைக்க பொய் நாடகமாடிய இளம்பெண்ணின் சூழ்ச்சியை கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon