--- --:--:-- --

கோவையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வங்கி ஊழியர்

6

கோவையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வங்கி ஊழியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். செல்வ புரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞன் தனியார் வங்கி ஒன்றில் கிரெடிட் கார்டு பேயில் பணியாற்றி வருகிறார்.

 

இவர் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி தனியாக இருந்த நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து மிரட்டி பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் ராம்குமாரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon