உயிருக்கு உலை வைத்த கருவேல மரங்கள்.. பரிதாபமாக போன உயிர்..!
நாகை அருகே சாலையில் படர்ந்து கிடக்கும் கருவேல மரங்களால் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நாகை மாவட்டம் தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்.
இவர் திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சாலையின் பக்கவாட்டில் வரும் வாகனம் தெரியாத அளவிற்கு அங்கு கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுவதால் நாகையை சேர்ந்த ராஜீவ்சனின் இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த வாகனம் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்று ராஜேந்திரன் உயிரிழந்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





