வயிற்று வலி ஏற்பட்டு 6 வயது சிறுமி உயிரிழப்பு..!
கோவையில் வயிற்று வலி ஏற்பட்டு பள்ளி சிறுமி உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வரதராஜத்தை புரத்தை சேர்ந்த ராஜாமணி – புவனேஸ்வரி தம்பதியினரின் 6 வயது மகள் ரியா.
மாநகராட்சி பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஐந்தாம் தேதி இரவு ரியாஷினி வயிற்றுவலி ஏற்பட்டதாக பெற்றோரிடம் கூறினார். பின் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரியாஷினிக்கு வயிற்றில் கட்டி இருப்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தங்கள் குழந்தை உயிரிழப்பில் சந்தேகம் இல்லை என்றாலும் மருத்துவர் சிகிச்சை குறித்து விசாரிக்க வேண்டும் என சிங்களூர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே உயிரிழந்த சிறுமியின் வீட்டில் நேரில் சென்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.





