13 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த 22 வயது இளைஞர் கைது..!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே 13 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த 22 வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கூலி தொழிலாளியான தனசேகரன் என்பவர் 13 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார்.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தனசேகரன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.





