நடனமாடிக் கொண்டிருந்த 19 வயது இளைஞர் விழுந்து மரணம்..!
தெலுங்கானாவில் திருமண விழாவின் பொழுது நடனம் ஆடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அப்படியே மயங்கி விழுந்து உயிரிழந்த காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்தது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் என்பது தெரியவந்துள்ளது.
நிர்மல் மாவட்டத்தில் திருமண விழாவில் அவர் கலந்து கொண்ட போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பொழுது பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக உயரிழந்து இருக்கலாம் என தெரிகின்றனர்.
இருப்பினும் பரிசோதனைக்கு பிறகு முழு விவரங்கள் தெரியவரும் என கூறப்படுகிறது. தற்போது அந்த இளைஞர் நடனமாடிக் கொண்டிருந்த பொழுது மயங்கி விழுந்து உயிரிழந்த காட்சிகள் வெளியாகி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





