--- --:--:-- --

வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி ..!

6

டலூர் மாவட்ட வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் எம் புதூர் கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

காயமடைந்த நெல்லிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல அதிமுக ஒருங்கிணைப்பாளர், ஓ பன்னீர்செல்வம் விடுத்திருக்கும் அறிக்கையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

 

Right Menu Icon