பேண்டு வாத்தியத்துக்கு காசு தராமல் – கல்யாணத்தை நிறுத்திய மாப்பிள்ளை
உத்திரப்பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் பேண்டு வாத்திய கட்டணத்தை யார் செலுத்துவது என தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த மாப்பிள்ளை திருமணத்தை நிறுத்திவிட்டு வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சஹரன்பூர் மாவட்டத்திலுள்ள மிர்சாபூர் என்ற இளைஞருக்கு திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக அவருக்கு பேண்ட் வாத்தியங்களை அழைத்து சென்றுள்ளார். தர்மேந்திரா திருமண சடங்குகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இசைக்குழுவினர்பணம் கேட்டனர்.
அதற்கு மணமகள் தரப்பினர் தாங்கள் இசைக்குழுவை வரவழைக்கவில்லை என கூறி பணம் கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் மணமகளும் வாக்குவாதத்தில் ஈடுபட பேண்ட் வாத்திய குழுவுடன் மணமேடையில் இருந்து வெளியேறினார் மணமகளின் தந்தை . பேண்ட் வாத்திய கட்டணத்தை யார் செலுத்துவது என்ற தகராறால் திருமணமே நின்றுபோன நிகழ்வு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.





