தேர்வு முடிவுக்காக காத்திருந்த 12ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!
புதுச்சேரியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சோலை நகரை சேர்ந்த கூலித் தொழிலாளியான குமரவேல் அதே பகுதியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.
பொதுத் தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






