--- --:--:-- --

சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரது படங்களுடன் ஒற்றைத் தலைமை போஸ்டர்..!

1

ராமநாதபுரம் அருகே சசிகலா, ஓபிஎஸ் படங்களுடன் ஒன்றிய தலைமைக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

 

அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு ஆதரவாக குரல் எழுந்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாகவும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமிக்கு ஆதரவாகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

 

பரமக்குடியில் புதிய திட்டமாக சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரது படங்களுடன் ஒன்றிய தலைமைக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலாவுடன், ஓபிஎஸ் படமும் இடம் பெற்றிருப்பதால் பரமக்குடியில் அதிமுக தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

Right Menu Icon