அவன் இவன் பட நடிகைக்கு முடிந்த திருமணம்..!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்பவர் நடிகை மது ஷாலினி, இவர் தமிழில் முதல்முறையாக பழினியப்பா கல்லூரி திரைப்படத்தின் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து பாலா இயக்கத்தில் அவர் நடித்த அவன் இவன் திரைப்படத்தின் முலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்த மது ஷாலினி கடைசியாக விசித்திரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை மது ஷாலினிக்கு நேற்று ஹைதராபாத்தில் கோகுல் ஆனந்த் என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது.
அவர்களின் திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். இணையத்தில் வைரலான அவர்களின் திருமண புகைப்படம் வெளியாகி உள்ளது.






