--- --:--:-- --

2 நாட்களில் 150க்கும் அதிகமானோருக்கு வயிற்றுப்போக்கு..!

2

காரைக்காலில் அடுத்தடுத்து 150க்கும் அதிகமான வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவருக்கு அதிகப்படியான மாம்பழம் சாப்பிட்டதே காரணம் என தெரியவந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 15 குழந்தைகள் உட்பட 150க்கும் அதிகமானோர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டனர்.

 

காரைக்கால் மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து பலர் பாதிக்கப்பட்டதால் மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டது.

 

அதன் முதற்கட்ட விசாரணையில் அதிகளவு மாம்பழம் உட்கொண்டதால் வயிற்றுப் போக்கு ஏற்பட காரணம் என நலவாழ்வு துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை வெளியான விசாரணை நடத்தி வருகிறது.

 

Right Menu Icon