8 மாதம் கருவுற்ற பெண்ணுக்கு உடல் முழுவதும் சூடு வைத்த கணவர் கைது..!
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மனைவியை கொடூரமாக கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார். பூபலன் குடியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான மணிராஜ் அவரது மனைவியை சந்தேகத்தின் பேரில் துன்புறுத்தி வந்துள்ளார்.
எட்டு மாதம் கருவுற்றிருந்த அந்தப் பெண் மனமுடைந்து இரண்டு குழந்தைகளோடு தாய் வீட்டில் தஞ்சம் அடைந்தார். அவரை சமாதானம் செய்து அழைத்து வந்து ஆதரவு கொடுக்காமல் துன்புறுத்தியுள்ளார். மேலும் உடல் முழுவதும் சூடு வைத்து கொடுமைப்படுத்தி உள்ளார்.
இதனால் ரத்தப்போக்கு ஏற்பட்டு அந்தப் பெண்ணுக்கு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொடுமைக்கார கணவனை காவலர்கள் கைது செய்துள்ளனர்.






