--- --:--:-- --

வாகனங்களை அடித்து சென்ற வெள்ளம்..!

9

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கன மழையால் கிராமத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் இருசக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் மிதமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் நேற்று உதகை, குன்னூர் விட பகுதிகளில் கனமழை பெய்தது .

 

விவசாயம் செய்யக்கூடிய பகுதியில் கொட்டி தீர்த்த பகுதியால் விளைநிலங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை வெள்ளத்தில் இருசக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி காய்கறிகள் நீரில் மூழ்கியுள்ளன. சாலையில் தேங்கிய மழை நீர் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon