கோயில்களில் மனிதனுக்கு முதல் மரியாதை கிடையாது..!
கோவிலில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்க கூடாது எனவும் கோயில்களில் முதல் மரியாதை கடவுளுக்கு மட்டுமே, மனிதனுக்கு அல்ல எனவும் மதுரை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வனப்பகுதியில் உள்ள கோயில் திருவிழாவில் சாதியை அடிப்படையாகக் கொண்டு ஒருவருக்கு வழங்கப்படும் முதல் மரியாதை சட்டத்திற்குப் புறம்பானது எனவும் யாருக்கும் முதல் மரியாதை அளிக்க கூடாது என உத்தரவிட வேண்டும் எனக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கோயில் திருவிழாக்களில் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோயில்களில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே. மனிதனுக்கு அல்ல என்று கூறிய நீதிபதி கோவிலில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்க வேண்டாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





