--- --:--:-- --

குழந்தையை கொடூரமாக தாக்கிய பணிப்பெண்..!

11

மத்திய பிரதேசத்தில் குழந்தையை பார்த்துக்கொள்ளும் பணியில் இருந்த பெண் அந்த குழந்தையை அடித்து துன்புறுத்திய வீடியோ காட்சி வெளியான நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்த பெற்றோர் இரண்டு பேரும் வேலைக்கு சென்ற நிலையில் தங்கள் இரண்டு வயது குழந்தையை பராமரிக்க பெண் ஒருவரை நியமித்தனர்.

 

ஆனால் குழந்தையின் உடல் வேகமாக இருந்ததோடு பல்வேறு மாற்றங்கள் தெரியவே அவர்கள் வீட்டில் சிசிடிவி கேமராவை பொருத்தினர். அப்போது அந்த பெண் குழந்தையை அடித்து துன்புறுத்துவதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

 

மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் மற்றும் உணவு என அனைத்து வசதிகள் செய்து கொடுத்த போதும் பணிப்பெண் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இதனையடுத்து அந்த பணிப்பெண் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon