குடிகார தந்தைக்கு பயந்து காட்டுக்குள் ஓடிய குழந்தைக்கு நேர்ந்த சோகம்…!
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே மது போதையில் அடிக்க வந்த தந்தைக்கு பயந்து ரப்பர் தோட்டத்தில் ஓடிய பெண் குழந்தை பாம்பு கடித்து உயிர் இழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கூலித் தொழிலாளியான சுரேந்திரன் இரவு மதுபோதையில் மனைவி குழந்தைகளை அடித்து வரப்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு பயந்து அருகில் இருந்த ரப்பர் காட்டுக்குள் குழந்தை ஓடியுள்ளது. அப்போது பாம்பு ஒன்று குழந்தையை கடித்துள்ளது.
இதையடுத்து அந்த குழந்தை அழுதுகொண்டே கூறியதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.





