5வது அலைக்கான அறிகுறி வந்துவிட்டது எனக்கூறும் ராதாகிருஷ்ணன்..!
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரொனா தாக்கம் அதிகரித்துள்ளதால் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது என கூறினார்.
கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் மட்டுமின்றி தமிழகத்திலும் கொரொனா தொற்று அதிகரித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரொனா பாதிப்பு குறைகிறது எனவும் ராதாகிருஷ்ணன் கூறினார்.
கருமுட்டை விற்பனை செய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உறுதியளித்தார்.






