LKG, UKG வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்..!
அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து இயங்கும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய ஆட்சி காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவால் கூடுதலாக இருந்த ஆசிரியர்கள் எல்கேஜி யூகேஜி வகுப்புகளுக்கு பாடம் எடுக்க அனுப்பிவைக்கப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்ததால் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு பாடம் எடுக்க சென்றனர் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும் சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மையங்களில் தொடர்ந்து குழந்தைகள் தங்கு தடையின்றி கல்வியை பெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சரின் அறிவுரைக்கு ஏற்ப அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.






