மிட்டாய் வாங்கி தருவதாக கூறி 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்..!
ஆந்திராவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை பிடித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். 48 வயதுடைய பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி ஸ்ரீதர். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில் இரண்டாவது மனைவியுடன் ஆந்திராவில் வசித்து வருகிறார்.
அவரது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை மிட்டாய் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர் வெளியே வந்த ஸ்ரீதர் அங்கிருந்து ரயில் நிலையம் பகுதிக்கு தப்பி ஓடினார். பின்னர் சிறுமிக்கு நடந்த கொடுமையை அறிந்த அந்த பகுதி மக்கள் ஸ்ரீதரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





