அரசு விடுதியில் கல்லூரி மாணவர் தற்கொலை..!
கடலூர் மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜீவா. கல்லூரி மாணவரான இவர் இரவு முழுவதும் வீட்டிற்கு வராத நிலையில் அவரின் பெற்றோர் தேடியுள்ளனர்.
இந்த நிலையில் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் விடுதியின் பின்புறம் உள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





