14 வயதில் 150 கிலோ தூக்கிய மாணவன்..!
திருப்பூரில் 14 வயது மாணவர் பளுதூக்குதலில் சாதனை செய்து நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகார சான்றிதழ் பெற்றுள்ளார். திருப்பூரை சேர்ந்த 14 வயது மாணவன் ஆதித்யா தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார்.
உடற்பயிற்சி மீது அதிக ஆர்வம் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்று வருகிறார். கோவையை சேர்ந்த மாணவர் ஒருவர் ஏற்கனவே 135 கிலோ எடுத்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.
அதனை முறியடிக்கும் வகையில் தனது முந்தைய சாதனையை முறியடிக்கவும் 150 கிலோ பளு தூக்கி தனது சாதனையை தானே முறியடித்துள்ளார். அந்த மாணவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.





