--- --:--:-- --

முகமது நபி பற்றிய கருத்தால் கிளம்பிய சர்ச்சை..!

8

குப்புவாத அணுகுமுறையை பின்பற்றுவதை நிறுத்துமாறு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபூர் ஷர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து பாஜகவினர் நீக்கப்பட்ட நிலையில் அவரின் கருத்துக்கு அரபு நாடுகள் உள்ளிட்ட 57 இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கண்டனம் தெரிவித்தது.

 

இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் மத உரிமைகளை உறுதிப்படுத்துமாறு அந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் குறுகிய எண்ணம் கொண்ட கருத்துக்களை நிராகரிப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பான அறிக்கையில் அனைத்து மதங்களுக்கும் இந்தியா மிகப் பெரும் மரியாதை அளிப்பதாகவும் தனிநபர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களை இந்தியாவின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

 

இஸ்லாமியர்களின் ஒத்துழைப்பு அமைப்பு நிறைந்த கருத்துக்கள் வருத்தத்திற்கு உரியது என்றும் வகுப்புவாத அணுகுமுறையைப் பின்பற்றுவது, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நடத்த வேண்டும் எனவும் வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

 

Right Menu Icon