--- --:--:-- --

தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக புகார்..!

3

சேலம் அருகே தவறான சிகிச்சையால் பெண் இறந்தாக கூறப்படும் நிலையில் தனியார் மருத்துவமனையை உறவினர்கள் அடித்து நொறுக்கினர். சேலம் மாவட்டம் சவுரிவூரைச் சேர்ந்த பெண் ஒருவர் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக எடப்பாடியில் உள்ள அரவிந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து பின்னர் அதனை சரி செய்ய 3 முறை அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அஜீரணக் கோளாறு மற்றும் மூச்சுக்குழலில் அடைப்பு ஏற்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில் தவறான சிகிச்சை அளித்த மருத்துவரை போலீசார் கைது செய்து மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon