--- --:--:-- --

நன்றி தமிழ்நாடு என ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி..!

4

மிழ்நாட்டிற்கு நேற்று வந்த பயணம் மறக்க முடியாது என்றும், நன்றி தமிழ்நாடு எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். ஒரு நாள் பயணமாக நேற்று சென்னைக்கு வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் வரவேற்பளித்தனர்.

 

அடையாறு விமானப்படைத் தளத்துக்கு வந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று 37 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, 2,900 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

 

பின்னர் தனி விமானம் மூலம் டெல்லி சென்றார். , தமிழ்நாட்டிற்கு நேற்று வந்த பயணம் மறக்க முடியாது என்றும் நன்றி தமிழ் நாடு என்றும் பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

Right Menu Icon