5 வயது சிறுமியைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்..!
மத்திய சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் உள்ள ஒரு இடத்தில் ஜன்னல் வழியே எதிர்பாராமல் கீழே விழுந்து தொங்கி கொண்டிருந்த சிறுமியை தீயணைப்பு வீரர் காப்பாற்றினார். எந்தவித பாதுகாப்பு கருவியும் இல்லாமல் உபகரணங்களும் இல்லாமல் கட்டடத்தின் ஆறு மாடுகளில் ஏறிச்சென்று அந்த சிறுமியை காப்பாற்றும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தீயணைப்பு படை வீரர் தனது வீட்டிற்கு பக்கத்து வீட்டிற்கு அருகில் 5 வயது சிறுமி ஜன்னலில் தவறி விழுந்து தொங்கிக் கொண்டிருந்தார். அழுவதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த தீயணைப்பு வீரர் உடனடியாக அந்த சிறுமியை காப்பாற்ற நினைத்து எந்தவிதமான பாதுகாப்பு கருவிகளோ அல்லது உபகரணங்களும் இல்லாமல் ஏறிச்சென்று நடுவானில் ஊசலாடிக் கொண்டிருந்த சிறுமியின் உடலை பிடித்து காப்பாற்றியுள்ளார். சில நிமிடங்களுக்குப் பிறகு சிறுமியின் தாய் சம்பவ இடத்திற்கு வந்து பத்திரமாக கீழே கொண்டு வந்து தனது தாயிடம் ஒப்படைத்துள்ளார்.





