பிரதமர், முதலமைச்சர் பங்கேற்ற விழாவில் பரபரப்பு..!
பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் திமுக மற்றும் பாஜக தொண்டர்கள் தனித்தனியாக பிரிந்து முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்றைய விழாவில் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி உள்ளே வருவதற்கு முன்பாகவே திமுக தொண்டர்களும் பாரதிய ஜனதா தொண்டர்களும் பரஸ்பரம் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி கொண்டனர்.
பாரதிய ஜனதாவினர் பாரத் மாதா கி ஜே என்றும், மோடி ஜி வாழ்க என்றும் முழக்கங்களை எழுப்பினார். அப்பொழுது பெரியார் வாழ்க, கலைஞர் வாழ்க, தளபதி வாழ்க என்ற திமுக தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அரங்கில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
விழா தொடங்குவதற்கு முன்பு மத்திய அரசின் சாதனைகள் பிரதமர் மோடி பற்றிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் புகழ்ந்து கூறிய போது பாரதிய ஜனதா உற்சாக முழக்கம் எழுப்பினர். முதலமைச்சர் பெயரை குறிப்பிடாமல் இருந்தால் திமுக தொண்டர்கள் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.
மத்திய இணை அமைச்சர், முதலமைச்சர் பெயரை குறிப்பிட்ட உடன் திமுகவினர் அவரைப் பேசவிடாமல் கோஷங்களை எழுப்பினர்.






