--- --:--:-- --

மதுபோதையில் தந்தையை தீர்த்துக்கட்டிய மகன்..!

7

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தந்தையை மகனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பாரதி நகரைச் சேர்ந்தவர்கள் ராமு, ரேணுகா தம்பதி. இவர்களுக்கு தினேஷ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

 

மதுபோதைக்கு அடிமையான தினேஷ் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த மூன்று நாட்களுக்கு முன் வீட்டிற்கு வந்த தினேசுக்கும், தந்தைக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில் கரண்ட் இல்லாததால் மாடியில் தூங்கிக் தனது தந்தையை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிர் உயிரிழந்தார்.

 

Right Menu Icon