--- --:--:-- --

16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

4

மிழகத்தில் இன்று 16 மாவட்டங்களிலும். நாளை 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

 

சென்னை வானிலை மைய இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தமிழகம், புதுச்சேரியில் இதர பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon