இனி பள்ளிகளில் சனிக்கிழமை விடுமுறை..!
2022ஆம் ஆண்டில் இருந்து 2023 ஆம் ஆண்டு வரை உள்ள கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வகுப்புகள் மாறி மாறி நடந்த நிலையில் தற்பொழுது சனிக்கிழமைகளில் பள்ளி இருக்குமா இருக்காதா என்று குழப்பம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே நிலவி வந்தது. இந்த நிலையில் அமைச்சரின் இந்த புதிய அறிவிப்பு மாணவர்களுக்கு தெளிவையும், மகிழ்ச்சியும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






