கேரள வரதட்சணை வழக்கில் கணவருக்கு தண்டனை..!
நாட்டையே உலுக்கிய விஷ்மயா தற்கொலை வழக்கில் கணவரை குற்றவாளி என்று கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளாவில் கடந்த ஆண்டு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவி விஸ்மயா வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் இன்று கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பின் படி கணவரின் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விஷ்மையா தற்கொலைக்கு கணவர் கிரண்குமார் தான் காரணம் எனவும், அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





