தண்ணீர் பாட்டிலில் கிடந்த பல்லி..!
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் பத்து ரூபாய் குடிநீர் பாட்டிலில் பல்லி கலந்ததால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கீழவீதி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தனது குடும்பத்தினருடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பொது தரிசனத்தில் வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த இளைஞர் ஒருவர் குடிநீர் பாட்டிலை வாங்கி மூடியைத் திறந்த பொழுது அதில் பல்லி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக புகாரை வாங்க மறுத்த சமயபுரம் காவல் துறையினர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





