முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் நன்றி..!
மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்த தமிழ்நாடு முதல் அமைச்சர் முக ஸ்டாலினுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் பால்பவுடர் அரிசி மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைத்திருக்கும் ஆதரவுக்கரம் நீட்டிய இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவிக்க கடமைப் பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விஷயத்தில் உதவிய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தொண்டமானையும் பாராட்டுவதாக ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். முன்னதாக இலங்கை வந்து சேர்ந்த 50 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் மருந்துப் பொருட்களை இலங்கைக்கான இந்தியத் தூதர் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் வழங்கினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





