கிரிவலப் பாதையில் கருணாநிதி சிலை அமைக்கத் தடை..!

திருவண்ணாமலை கிரிவல பாதை அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

 

திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் மாநில நெடுஞ்சாலையை இணைக்கும் இடத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கார்த்திக் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கிரிவலப்பாதையில் சிலையை வைப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் நீர் போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது உரிய ஆதாரங்களை சேகரித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.