--- --:--:-- --

பல ஆண்களுடன் செல்போனில் பேசியதால் மனைவியை கொலை செய்த மூன்றாவது கணவன்..!

8

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பல ஆண்களுடன் செல்போனில் பேசி வந்த மனைவியை கொலை செய்த மூன்றாவது கணவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோயில் பகுதியில் வசித்து வந்த காளீஸ்வரி என்ற பெண் கடந்த 14ஆம் தேதி உயிரிழந்தார்.

 

சடலத்தை கைப்பற்றிய போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அவரின் 3வது கணவரான லட்சுமணன் கொலையாளி என்பது தெரியவந்தது. காளீஸ்வரி வேறு சில ஆண்களுடன் செல்போனில் அதிகம் பேசி வந்ததால் அவரை கொலை செய்ததாகவும் தெரிவித்து இருக்கிறார்.

 

தானும் தற்கொலைக்கு முயன்றதாகவும், ஆனால் தான் இந்த முடிவிலிருந்து திடீரென பின் வாங்கியதாகவும் தெரிவித்த லட்சுமணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon