--- --:--:-- --

வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் அசாம்..!

1

சாமில் பெய்து வரும் பலத்த மழையால் 57 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். வட மாநிலங்கள் கடும் வெயிலில் தவித்து வரும் நிலையில் வடகிழக்கு மாநிலமான அசாம் பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மழையால் 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

 

வெள்ளம் சூழ்ந்து உள்ளதால் மக்கள் வெளியே வர இயலாமல் முடங்கியுள்ளனர். சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 222 வீடுகள் மழையால் மூழ்கியுள்ள நிலையில் 10 ஆயிரத்து 326 ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

 

பல இடங்களில் சாலைகள் பாலங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சில இடங்களில் நிலச்சரிவால் ரயில் பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இரண்டு ரயில்கள் இடையிலேயே நிறுத்தப்பட்டதால் 1,400 பயணிகள் சில மணிநேரம் நடுவழியில் சிக்கி தவித்தனர்.

 

இவர்கள் விமானப்படை ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்கப்பட்டனர். இதற்கிடையே மாநில பேரிடர் மீட்பு படையினர் ராணுவம் துணை ராணுவம் களமிறங்கியுள்ளனர்.

Right Menu Icon