வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.1,015ஆக உயர்வு..!
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1000 ரூபாயை தாண்டியுள்ளது. வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரிக்கப்பட்ட ஆயிரத்து 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 965 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
அது தற்போது மேலும் 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு அதே நிலையில் கடந்த மூன்று வாரங்களாக நீடிக்கிறது. தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால் நடுத்தர மக்களின் மாதாந்திர செலவு மேலும் கூடும் நிலை ஏற்பட்டுள்ளது.





