வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் நன்றி..!
இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் முதலமைச்சர் இந்த மனிதாபிமான நடவடிக்கை இந்தியா இலங்கை இடையிலான நல்லுறவை மேம்படுத்த உதவும் என்று நம்புவதாக குறிப்பிட்டார்.
முன்னதாக பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு உணவு பொருட்கள், மருந்து உள்ளிட்டவற்றை தமிழக அரசு வழங்க உள்ளதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருந்தார்.





