--- --:--:-- --

அழகுபடுத்தப் போய் வீங்கிப் போன உதடு..!

5

ங்களை அழகுபடுத்திக் கொள்ள பில்லர் பயன்படுத்திய பெண்ணுக்கு இயல்பை விட ஆறு மடங்கு உதடு பெரியதாகி விபரீதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம். அதற்காக இயற்கையாக கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது மற்றும் மேக்கப் சாதனங்களை வாங்கி தங்களை அழகுபடுத்திக் கொள்வது பெரும்பாலான பெண்களின் தினசரி பணியாகவே உள்ளது.

 

இதை எல்லாம் தாண்டி மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் தங்களை அழகுப்படுத்திக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகம் உள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பெண் தனது உதடு அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக பில்லர் பயன்படுத்தியுள்ளார்.

 

பில்லர் என்றால் உதடு சற்று பெரிய பெரிய அளவில் பருமனாக தெரிவதற்கு ஊசி போடுவதாகும். இதனால் தொடக்கத்தில் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு சற்று வலி ஏற்படும். மேலும் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். இது பற்றி எல்லாம் கவலைப்படாமல் பில்லர் பயன்படுத்தியவருக்கு நேரம் செல்ல செல்ல உதடு இயல்பைவிட பெரியதாகி விட்டது.

 

இதனால் அவரால் பேச முடியவில்லை. சுவாச பகுதியில் இறுக்கமடைந்து சுவாசிக்கவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தங்களை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஆபத்தை உணராமல் கண்டதை பயன்படுத்தும் பெண்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக உள்ளது.

 

Right Menu Icon