--- --:--:-- --

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் அவசர கடிதம்..!

8

மிழகத்தில் மின் வினியோகத்தை சீரமைக்க தேவையான நிலக்கரி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி முதலமைச்சர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று எழுதியுள்ள கடிதத்தில் தமிழகத்தின் மின் வினியோகத்தை சீரமைக்க போதுமான நிலக்கரி கையிருப்பில் இல்லை என்று தெரிவித்துள்ளார். தமிழக மின் உற்பத்தி மையங்களுக்கு தினசரி 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

தற்போதைய நிலையில் 50 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி மட்டுமே தமிழகத்திற்கு வருகிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் ஒடிசாவில் உள்ள சுரங்கங்களில் இருந்தும், பாரதிக் விசாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்களில் இருந்து தமிழகத்திற்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Right Menu Icon