மகனின் இறப்பிற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் செய்த தாயை வாயை மூடு எனக்கூறிய அரசு அதிகாரி.!
டெல்லியில் மகனின் உயிர் இழப்புக்கு நீதி கேட்டு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்த தாயை அரசு அதிகாரி ஒருவர் விரலை நீட்டி திட்டும் வீடியோ வேகமாக பரவி வருகிறது. கடந்த 20ம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுவனுக்கு வாந்தி ஏற்பட்டதால் ஜன்னலுக்கு வெளியே தலை நீட்டிய போது மின்கம்பத்தில் மோதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அஜாக்கிரதையாக செயல்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விபத்தில் பலியான 10 வயது சிறுவனின் பெற்றோர் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கோட்டாட்சியர் மகன் இறந்த துக்கத்தில் அழுது புலம்பிக் கொண்டிருந்த பெண்ணை பார்த்து வாய்மூடி அமைதியாக இருக்கும்படி விரலை நீட்டி திட்டியதாக வீடியோ வெளியாகியுள்ளது.
விபத்து குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் பள்ளி வாகன ஊழியர்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.






