மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் நேரில் ஆய்வு..!
சென்னை அடுத்த கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மணலி உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால்வாய் பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை விரைவுபடுத்த முதல் அமைச்சர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வு பணியின் போது மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





