--- --:--:-- --

மதுபோதையில் மனைவியை கொலை செய்த கணவன்..!

5

சிதம்பரம் அருகே மது போதையில் மனைவியை கணவனே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அருகே வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். கூலி தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி தீபா.

 

இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள். மதுபோதைக்கு அடிமையானவர் மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவது வழக்கம். சம்பவத்தன்று அதுபோல பிரச்சனையாகவே, அருகே இருந்த கத்தியை எடுத்து மனைவியை அடித்து கொலை செய்தார்.

 

ஆனால் தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றியதோடு அவரை கைது செய்தனர். தாய் உயிரிழந்து தந்தையும் சிறை சென்றதால் இரண்டு குழந்தைகளும் ஆதரவின்றி தவிப்பது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon