லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ காட்சி..!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தில் சூரிய ஒளிபடும் அபூர்வ காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 5 முதல் 10 ஆம் தேதி வரை லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு நடைபெறுகிறது.
அதன்படி இன்று காலை சூரிய உதயத்தின் போது பிரதிபலித்த ஒளிக்கதிர் நேரடியாக லிங்கத்தின் மீது பட்டு ஒளித்தது. சுற்றுவட்டார மக்கள் இந்த அபூர்வ நிகழ்வை கண்டு சிவனை தரிசித்து சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





