--- --:--:-- --

மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தாய் செய்த கொடூரம்..!

2

சென்னை அம்பத்தூரில் மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அம்பத்தூர் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த பரத்m லதா தம்பதிக்கு 14 வயதில் மகன் இருந்தான்.

 

ஆறு வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தவர் அவரது கணவர் 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுநாள் வரையில் வீட்டுச் செலவு குடும்பச் செலவுக்கு அந்த பணத்தை வைத்து சமாளித்து வந்தார். பணம் முடிந்துபோனதும் மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

 

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

காலையில் வெகு நேரமாகக் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது தாயும் மகனும் உயிரிழந்து கிடந்தனர். சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon