காஷ்மீரில் தமிழக வீரர் உயிரிழப்பு..!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அத்திமாஞ்சேரி பேட்டையை சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் ஜம்மு காஷ்மீரில் நடந்த விபத்தில் உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரரான மணி என்பவர் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
மணி உள்ளிட்ட 12 பேர் தங்களது பணியை முடித்துவிட்டு நேற்று வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிரே மோதுவது போல வந்த சரக்கு வாகனத்திடமிருந்து தப்பிக்க முயன்ற போது இவர்களது வாகனம் அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் சுவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மணி உள்ளிட்ட 10 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 9 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சரக்கு ஏற்றி வந்த லாரி எதேச்சையாக வேகமாக வந்ததா அல்லது ஏதேனும் சதிவேலை காரணமா என சிஆர்பிஎஃப் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





