--- --:--:-- --

பட்டியலின சிறுவன் மீது கொடூர தாக்குதல்..!

5

உத்திரபிரதேசத்தில் பட்டியலின சிறுவனை அடித்து உதைத்து அநாகரிகமாக நடத்திய சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். உத்தரபிரதேச மாநிலத்தில் பட்டியலின சிறுவன் ஒருவனை ஒரு கும்பல் கூட்டமாக சேர்த்து அடித்து உதைக்கின்றன.

 

பின்னர் அந்த சிறுவனை சாதியை சொல்லி திட்டி தாக்கியுள்ளனர். திடீரென ஒரு கட்டத்தில் அந்த சிறுவனை, இளைஞன் ஒருவன் இரு சக்கர வாகனத்தின் மீது அமர்ந்து கொள்ளவே அந்த சிறுவனை கால்களை நாக்கால் சுத்தப்படுத்த வைத்திருக்கின்றனர்.

 

இந்த சம்பவங்கள் எல்லாம் வீடியோவாக எடுக்கப்பட்ட நிலையில் அதிக வேகத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து சிறுவன் போலீசில் புகார் அளித்ததால் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் 7 பேரை கைது செய்தனர்.

 

சிறுவனின் தாய் வயல்களில் வேலை பார்த்து வந்த நிலையில் கூலி தராததால் சிறுவன் அதனை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த கும்பல் சிறுவனை அநாகரீகமாக நடத்தியது தெரிய வந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon