கர்ப்பிணி தாய்மார்களுக்கு யோகா செய்து காட்டிய அமைச்சர்..!
உதகையில் தோடர் இனத்தை சேர்ந்த கர்ப்பிணி தாய்மார்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் யோகாசன செய்முறை பயிற்சி அளித்தார். முத்தநாடு கிராமத்தில் நடமாடும் மருத்துவ வாகன சேவை தொடக்க நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் சுப்பிரமணியன் சுகாதாரத் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கான யோகா பயிற்சியில் கலந்துகொண்டார்.
அப்பொழுது கர்ப்பிணிகளுக்கான யோகாசன முறைகளை செய்து காண்பித்து அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.





